உங்களுக்கு இதய நோய் வராமல் தடுக்க வேண்டுமா!!? அதற்கு எளிமையான டிப்ஸ் இதோ!!!
இந்த காலத்தில் மாரடைப்பு என்பது தான் பல பேர் இறப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த மாரடைப்பு என்பது மன அழுத்தம், உணவு வகைகள், உடல் பருமன் போன்ற பல காரணங்களால் ஏற்படுகின்றது.
ஒரு சிலருக்கு மாரடைப்பு 3 முதல் 4 முறை ஏற்படும். அதன் பிறகு ஏற்பட்டால் அவர்களுக்கு உயிரிழப்பு என்பது ஏற்படும். அதே போல ஒரு சிலருக்கு முதல் முறை மாரடைப்பு வந்தாலே உயிரிழப்பு ஏற்படும். இந்த மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு ஏற்படுவதை விட அதிகமாக இளைஞர்களுக்கு ஏற்படுகின்றது.
உலக அளவில் மற்ற நோய்களால் உயிரிழந்தவர்களை விட இதய நோயால் உயிரிழந்தவர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது. உயிரிழப்பை ஏற்படுத்தும் மாரடைப்பை வராமல் தடுக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
மாரடைப்பு வராமல் தடுக்க சில எளிமையான டிப்ஸ்!!!
* இதய நோய்கள் வராமல் தடுக்க அதாவது மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு நல்ல கொழுப்புஙள் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
* இதய நோய்கள் வராமல் தடுக்க அதிகம் சர்க்கரை உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
* மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்க வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் வரை மறக்காமல் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.
* வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் ஆகிய சத்துக்கள் நிறைந்த முழு தானியங்களை சாப்பிடுவதன் மூலமாக இதய நோய் வராமல் தடுக்கலாம்.
* இதய நோய் வராமல் தடுக்க உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் அளிக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலேசனைப் படி உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
* நல்லெண்ணெய் இதயத்திற்கு மிகுந்த நன்மைகள் கொடுக்கும். அதனால் இதய நோய்கள் வராமல் தடுக்க நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.