உங்கள் முகத்தின் நிறம் வெள்ளையாக வேண்டுமா? அப்போ தக்காளி + அரிசிமாவை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
118
#image_title

உங்கள் முகத்தின் நிறம் வெள்ளையாக வேண்டுமா? அப்போ தக்காளி + அரிசிமாவை இப்படி பயன்படுத்துங்கள்!!

நம்மில் பலருக்கு முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமை முகத்தை வெள்ளை மற்றும் அதிக பொலிவாக மற்ற இந்த வழியை பாலோ செய்யுங்கள் போதும்.

தேவையான பொருட்கள்:-

*தக்காளி சாறு – 1 தேக்கரண்டி

*அரசி மாவு – 2 தேக்கரண்டி

*தூயத் தேன் – 1 தேக்கரண்டி

*பால் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் நறுக்கிய சிறு துண்டு தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 2 தேக்கரண்டி பச்சரிசி மாவு சேர்த்து கலந்து விடவும்.

பிறகு 1 தேக்கரண்டி காய்ச்சாத பால் மற்றும் 1 தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்கு குழப்பிக் பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

இந்த பேஸ்டை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். பின்னர் ஒரு காட்டன் துணி கொண்டு முகத்தை துடைத்துக் கொள்ளவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்யவும்.

20 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முதல் 4 முறை முகத்திற்கு பயன்படுத்தி வந்தோம் என்றால் டல்லடித்த முகம் ஜொலிக்கத் தொடங்கி விடும்.

பச்சரிசி மாவு: இது ப்ளீசிங்க் போல் செயல்பட்டு சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க பெரிதும் உதவுகிறது.

தக்காளி: தக்காளியில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை அதிக பொலிவுடன் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

Previous articleகோல்ப் காரில் இருந்து விழுந்த மேக்ஸ்வெல்! காயம் காரணமாக முக்கியமான போட்டியில் இருந்து விலகல்!!
Next articleவீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!!