தலை முடி புதர் போல் அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க!!
தற்பொழுது அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தலைமுடி உதிர்தல்.இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:-
1)அரிசி – 2 தேக்கரண்டி
2)சின்ன வெங்காயம் – 4
3)வெந்தயம் – 1 தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
அதன் பிறகு மற்றொரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
அரிசி மற்றும் வெந்தயம் நன்கு ஊறி வந்த பின்னர் அரிசி ஊறிய நீரை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம்,தோல் நீக்கிய நான்கு சின்ன வெங்காயம் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு கிண்ணத்தில் போட்டு அரிசி ஊற வைத்த நீரை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை தலை ,முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலையை சீகைக்காய் அல்லது அரப்பு பயன்படுத்தி கூந்தலை அலசிக் கொள்ளவும்.
வாரம் மூன்று முறை இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி தலை முடி அடர்த்தியாக வளரும்.