தினமும் இஞ்சி தேநீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

0
33
#image_title

தினமும் இஞ்சி தேநீர் பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

நம் உணவில் இஞ்சியின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இந்த இஞ்சி அதிக நறுமணத்துடன் இருப்பதினால் உணவில் சேர்க்கப்படும் பொழுது அவை மிகவும் சுவையாக இருக்கிறது. இஞ்சியில் துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.

இஞ்சியில் அடங்கியுள்ள சத்துக்கள்:-

*பொட்டாசியம்

*மெக்னீசியம்

*வைட்டமின் சி, பி6

*நியாசின்

*போல்ட்

*புரதங்கள்

*தாதுக்கள்

தினமும் இஞ்சி தேநீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*சளி தொல்லை இருபவர்கள் இஞ்சி தேநீர் செய்து சாப்பிட்டால் விரைவில் அந்த பாதிப்பு சரியாகும்.

*இஞ்சியில் அதிகப்படியான ஆண்டிபயாட்டிக் இருக்கிறது. இவை உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

*இந்த இஞ்சி தேநீர் செரிமானக் கோளாறுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

*உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுவதில் இஞ்சி தேநீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த இஞ்சியில் டீ செய்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும்.

*உடல் வலி, அசதி இருப்பவர்கள் இஞ்சியில் டீ செய்து பருகி வருவது மிகவும் நல்லது.

*இஞ்சியில் ஜின்ஜெரால்கள் மற்றும் பாராடோல்கள் இருக்கிறது.இதில் தேநீர் செய்து அருந்தி வருவதன் மூலம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க முடியும்.