தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Photo of author

By Divya

தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அந்த வகையில் தினமும் மாதுளை பழத்தை உண்டு வருவதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகள்: Mathulai palam benefits in tamil

மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், புரதசத்து, வைட்டமின் சி, கே உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

1) மாதுளையில் உள்ள பாலிபினோலிக் கலவைகள் உள்ளது. இது மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

2) மாதுளையில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

3) மாதுளை சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்கும். அதேபோல் இரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட் மற்றும் ஆக்சலேட்டுகளின் செறிவைத் தடுக்கவும் உதவுகிறது.

4) மாதுளையில் எலாகிடானின்ஸ் என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இது பார்கின்சன் மற்றும் அல்சைமர் நோயிலிருந்து மூளையைப் பாதுகாக்க உதவுகிறது.

5) மாதுளை இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த மாதுளம் பழத்தை உண்பதால் நம் உடலில் ஏற்படும் சோர்வு தன்மை நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

6) இந்த மாதுளை பழம் உடலில் ஏற்படும் அழற்சியைத் தடுக்க உதவுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

7) மாதுளையில் அதிகளவு ஆன்டிவைரல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. அவைகள் பல்வேறு வைரஸ் தொற்றுகள் மற்றும் பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

8) மாதுளையில் உள்ள வைட்டமின் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் ஏற்படும் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், மூல நோய், பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளை குணப்படுகிறது.