சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகிறதா? அப்போ இந்த ஒரு உருண்டை செய்து சாப்பிடுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகிறதா? அப்போ இந்த ஒரு உருண்டை செய்து சாப்பிடுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

இன்று பலர் செரிமானக் கோளாறால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.செரிமானக் கோளாறு ஏற்பட்டால் மலச்சிக்கல்,மூலம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே செரிமானக் கோளாறை சரி செய்ய இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை ட்ரை பண்ணவும்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)அரிசி மாவு
3)தேங்காய் துருவல்
4)நாட்டு சர்க்கரை
5)நெய்
6)ஏலக்காய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது பசு நெய் சேர்த்து சூடாக்கவும்.அதன் பின்னர் ஒரு கப் பச்சரிசி மாவு சேர்த்து கிளறவும்.

இதை ஒரு தட்டிற்கு கொட்டி வைத்து விடவும்.அதன் பின்னர் மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஒரு துண்டு சுக்கு மற்றும் இரண்டு ஏலக்காய் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் வறுத்த அரிசி மாவு மற்றும் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து ஒரு சுத்து விடவும்.இதை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.பிறகு பாதி தேங்காயை துருவல் கொண்டு நன்கு துருவி வைத்துக் கொள்ளவும்.

இதை அரிசி மாவு கலவையில் போட்டு நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு முழுமையாக நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.