ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0
210
#image_title

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

சளி பிடித்தல் ஆவி பிடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கு. ஆனால் அடிக்கடி ஆவி பிடித்து வந்தால் முகத்திற்கு பல வித பலன்கள் கிடைக்கும். ஆவி பறக்கும் நிலையில் உள்ள சூடு நீரில் சிறிது உப்பு சேர்த்து கொண்டு ஒரு போர்வை போட்டு ஆவி பிடித்தால் உடலில் பல வித மாயாஜாலங்கள் நிகழும்.

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:-

1)ஆவி பிடிப்பதினால் முகத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். இதனால் முகத்தில் காணப்படும் அழுக்குகள் முழுவதும் வெளியேறி பொலிவாக இருக்கும்.

2)ஆவி பிடித்த பின் முகத்தை தேய்த்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் உடனடியாக நீங்கி விடும்.

3)ஆவி நீர் முகத்தில் படுவதால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதுமட்டும் இன்றி முகத்தில் உள்ள துளைகள் எந்த ஒரு சிரமமும் இன்றி நிம்மதியாக சுவாசிக்கும்.

4)ஆவி பிடிப்பதினால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும். முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளால் துளைகளில் அழுக்கு சேரும். இந்த அழுக்குகளை ஆவி பிடிப்பதினால் நீக்க முடியும்.

5)அடிக்கடி ஆவி பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் சிறுவயதில் ஏற்படும் முதுமை தோற்றத்தை தடுக்க முடியும்.

6)உங்கள் முகத்தில் அதிகப்படியான பருக்கள் இருந்தால் 30 நிமிடங்களுக்கு ஆவி பிடித்திவிட்டு பின்னர் ஐஸ் கட்டி கொண்டு முகத்தை தேய்த்தால் பருக்கள் உதிர்ந்து விடும்.

Previous articleஉங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!
Next articleசைனஸ் பிரச்சினையா? இந்த இலையை வெச்சி ஆவி புடிங்க!