தொடர்ச்சியான இருமல் பாடாய் படுத்துகின்றதா!!? அதை குணப்படுத்த சில எளிமையான டிப்ஸ் இதோ!!!

Photo of author

By Sakthi

தொடர்ச்சியான இருமல் பாடாய் படுத்துகின்றதா!!? அதை குணப்படுத்த சில எளிமையான டிப்ஸ் இதோ!!!

நமக்கு இருக்கும் தொடர்ச்சியான இருமல் இருந்தால் அதை குணப்படுத்த வேண்டும் என்பதற்கான எளிமையான சில டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இருமல் என்பது நமக்கு பல காரணங்களால் ஏற்படுகின்றது. சளித் தொற்று இருக்கும் பொழுது இந்த இருமல் பிரச்சனை ஏற்படும். மேலும் தொண்டையில் நோய்க் கிருமிகள் இருந்தால் இருமல் ஏற்படும். ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது இருமல் ஏற்படும். தொண்டையில் ஏதாவது எரிச்சல் ஏற்பட்டால் இருமல் ஏற்படும். குளிர்பானங்கள் குடிப்பதாலும் இருமல் தொந்தரவு ஏற்படும். இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடும் பொழுது நமக்கு இருமல் ஏற்படும்.

இந்த இருமல் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி போன்ற பல பாதிப்புகளை தொடர்ச்சியான இருமலை ஏற்படுத்தும். இந்த இருமல் குணப்படுத்த அனைவரும் தற்பொழுது ஆங்கில மருந்து மாத்திரைகள் தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்த மருந்துகள் உடனடி தீர்வு தரும் இருந்தாலும் முழுமையான தீர்வு தருமா என்பது சந்தேகம் தான். இந்த இருமல் குணப்படுத்த உதவும் சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இருமலை குணப்படுத்த உதவும் டிப்ஸ்!!!

* இருமல் குணப்படுத்த நீராவி பிடிக்கலாம். அதாவது ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு போர்வையை உங்கள் மீது பார்த்ததாக கொண்டு நீராவி பிடிக்கலாம். இதன் மூலமாக இருமலை குணப்படுத்தலாம்.

* தொடர்ச்சியான இருமல் இருக்கும் பொழுது நாம் தேனை சிறிதளவு குடிக்கலாம். தேன் தொண்டைக்கு இதமான உணர்வை கொடுக்கும். தேன் நமக்கு ஏற்படும் தொடர்ச்சியான இருமல் குணப்படுத்த உதவும்.

* நமக்கு தொடர்ச்சியான இருமல் இருக்கும் பொழுது வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம். இதனால் தொடர்ச்சியான இருமல் குணமாகும்.

* நமக்கு தொடர்ச்சியான இருமல் இருக்கும் பொழுது நாம் முருங்கை சூப் தயார் செய்து குடிக்கலாம்.

* தொடர்ச்சியான இருமல் இருக்கும் பொழுது மிளகு எடுத்துக் கொள்ளலாம். மிளகு நம் தொண்டையில் இருக்கும் கிருமிகளை அழித்து தொடர்ச்சியான இருமலை குணப்படுத்தும்.

* முடிந்த வரை குளிர்பானங்கள் குடிப்பதையும் இனிப்புச் சுவை கொண்ட உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

* தொடர்ச்சியான இருமல் இருந்தால் நெஞ்சு எலும்பு சூப் தயார் செய்து குடிக்கலாம்.