அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு!

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு!

நம்மில் பலருக்கு காரணம் இன்றி உடலில் அலுப்பு, வலி உணர்வு ஏற்படும். இதை அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்று நாம் சொல்கிறோம். இது போன்ற உடம்பு வலி அதிக வேலைப்பளு, உடல் சோர்வு உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.

இந்த உடல் வலி பெரும்பாலும் குளிர்காலத்தில் தான் ஏற்படும். இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் இதுபோன்று ஏற்படும். இந்த உடம்பு வலியை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்கி விடலாம்.

தீர்வு 01:-

கடுகு எண்ணெய் தேவையான அளவு மற்றும் பூண்டு பல் சிறிதளவு சேர்த்து சூடாக்கி உடம்பில் வலி உள்ள இடத்தில் தேய்த்து மஜாஜ் செய்யலாம். இதனால் உடல் வலி குறையும்.

தீர்வு 02:-

தண்ணீரில் கல் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து உடல் தசைகளில் வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.

தீர்வு 03:-

இஞ்சியை அரைத்து சாறு எடுத்து நீரில் கலந்து அருந்தி வந்தால் உடல் வலி, பிடிப்பு உள்ளிட்டவைகள் நீங்கும்.

தீர்வு 04:-

தேங்காய் எண்ணெயில் சிறிது பூண்டு பல் சேர்த்து காய்ச்சி உடல் வலி இருக்கும் இடத்தில் தடவி வரலாம்.

தீர்வு 05:-

விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாடி மஜாஜ் செய்து வந்தால் வலி எல்லாம் பறந்து போய்விடும்.