இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்!

Photo of author

By Divya

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்!

Divya

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்!

தற்பொழுது உள்ள உணவுமுறை பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவையாக இல்லை. உண்ட உணவு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி விடுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு உடல் சார்ந்த பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரகம்
2)வெந்தயம்
3)ஓமம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம், 1/2 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 1/2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)திரிபலா பொடி
3)தேன்

செய்முறை:-

ஒரு கப் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடி, ஒரு தேக்கரண்டி திரிபலா பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் குடலில் தேங்கி கிடந்த மலம் இளகி வெளியேறும்.