பச்சிளம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தெரியவில்லையா!!? இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!!!

0
131
#image_title

பச்சிளம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தெரியவில்லையா!!? இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!!!

பச்சிளம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு மாசம் செய்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

நம் வீடுகளில் பச்சிளம் குழந்தை இருக்கையில் நாம் குழந்தையுடன் கொஞ்சுவது, தாலாட்டு பாடுவது, குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது போல பல செயல்கள் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய முக்கியமான முறைகள் பற்றி யாருக்கும் தெரிவது இல்லை.

அந்த வகையில் குழந்தைகளை குழிப்பாட்டும் முறை, குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது ஆகியவை யாருக்கும் தெரிவதில்லை. அவற்றில் நாம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பச்சிளம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் முறை…

* பச்சிளம் குழந்தைகளின் தலையில் சிறிதளவு எண்ணெய் தேய்க்க வேண்டும். பின்னர். மெதுவாக தலைக்கு மசாஜ் செய்ய தொடங்க வேண்டும். நம்முடைய கை விரல்களில் அழுத்தும் லேசாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின். எலும்புப் பகுதிகள் வலிமையாக இருக்காது.

* தலைக்கு மசாஜ் செய்து முடித்த பின்னர். மூக்கு, காது பகுதிகளை லேசாக மென்மையாக வருடி விட வேண்டும்.

* பின்னர் இரண்டு கைகளையும் குழந்தையின் மார்புப் பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அப்படியே மெதுவாக நீவி விட வேண்டும்.

* குழந்தைகளின் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யும் பொழுது அடிவயிற்றுப் பகுதியில் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடிகார முட்கள் சுழலும் திசையில் லேசாக மென்மையாக சுழற்றி அழுத்தி விட வேண்டும்.

* குழந்தைகளின் முட்டி மற்றும் பாதங்களை பிடித்து வயிற்றை நோக்கியபடி மெதுவாக அமுக்க வேண்டும்.

* அதன் பின்னர் குழந்தையின் தொடைப் பகுதியில் இருந்து உள்ளங்கால்கள் வரை நீவி விட வேண்டும்.

* பின்னர் குழந்தையின் தோள்பட்டையில் இருந்து உள்ளங்கை வரை மென்மையாக அழுத்தி விட வேண்டும்.

* பின்னர் குழந்தையின் மணிக்கட்டுகளை அனைத்து திசைகளிலும் மெதுவாக திருப்பி மசாஜ் செய்ய வேண்டும்.

* குழந்தையின் உள்ளங்கால்களில் பெருவிரலைக் கொண்டு நீவி விட வேண்டும்.

* அதன் பிறகு குழந்தையின் கால்களில் இருக்கும் பத்து விரல்களுக்கும் மெதுவாக நமது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை பயன்படுத்தி சொடுக்கு எடுத்து விட வேண்டும்.

* இறுதியாக குழந்தையை குப்புறப்படுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குழந்தையின். முதுகுப் பகுதியில் நம்முடைய விரல் நுனியில் மெதுவாக அழுத்தம் கெடுக்க வேண்டும். முதுகெலும்புகளை மேலிருந்து கீழ் என்ற முறையில் நீவி விட வேண்டும்.

இவ்வாறு பச்சிளம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்து வந்தால் குழந்தைகளுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த முறையில் மசாஜ் செய்யும் பொழுது செரிமானம் சீராக இருக்கும். இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனையும் வராது. பச்சிளம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது குழந்தைகளின் சருமத்திற்கும் எலும்பிற்கும் ஆரோக்கியத்தை அளிக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவர்களின் உடல் எடை மற்றும் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும்.

Previous articleகேரள மக்களின் பேவரைட் “பழம் பொரிச்சது” – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!
Next articleதீராத மூட்டு வலி பிரச்சனையா!!? அதை தீர்க்க விராலிமலை இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!!