படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% அனுபவ உண்மை..!!
மனிதர்களுக்கு இரவு நேர தூக்கம் அவசியமான ஒன்றாகும். குறைந்தது 8 மணி நேரம் தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் இரவு தூக்கம் என்ற ஒன்றை பலரும் மறந்து விட்டோம். இதற்கு மன அழுத்தம், வேலைப்பளு, முறையற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகிறது.
எனவே இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க தினமும் 1 கிளாஸ் மஞ்சள் பால், இஞ்சி தேநீர், புதினா தேநீர் அல்லது க்ரீன் டீ இதில் ஏதேனும் ஒன்றை அருந்தி வரலாம்.
1)மஞ்சள் பால்
தூக்கமின்மை பிரச்சனை நீங்க பாலில் மஞ்சள் கலந்து பருகலாம். இரவு தூங்குவதற்கு முன் இதை 1 கிளாஸ் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
2)இஞ்சி தேநீர்
1 கிளாஸ் நீரில் சிறிதளவு இஞ்சியை தட்டி போட்டு கொதிக்க விடவும். பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி தேன் கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன் பருகினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
3)புதினா தேநீர்
1 கிளாஸ் நீரில் சிறிதளவு புதினா இலைகளை போட்டு கொதிக்க விடவும். பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி தேன் கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன் பருகினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
4)க்ரீன் டீ
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் அபாயத்தைக் குறைக்கின்றன. இரவு தூங்க செல்வதற்கு முன் 1 கிளாஸ் க்ரீன் டீ பருகினால் பருகினால் உடனடியாக தூக்கம் வரும்.