ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!!

Photo of author

By Divya

ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!!

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும்.

துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை, அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட காரணங்களால் உடல் எடை கூடுகிறது.

இயற்கை முறையில் உடல் எடை குறைப்பது எப்படி?

உடல் எடையை குறைக்க தினமும் 1 கிளாஸ் இஞ்சி தண்ணீர் அருந்துவது நல்லது. இஞ்சியில்
பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

இஞ்சி தண்ணீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி – 1 துண்டு

*தேன் – 1 ஸ்பூன்

*தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 துண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை நேரத்தில் அருந்தவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால்
உடல் எடையை குறைவதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.