கிருஷ்ணர் எப்படி இறந்தார் தெரியுமா? முன் ஜென்ம வினை!

0
109
#image_title

மகாபாரத போர் நடந்தது நமக்கு தெரியும் அதன் பின்னர் என்ன நடந்தது? எப்படி கிருஷ்ணர் இறந்தார் ? என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

 

மகாபாரதப் போர் முடிந்த பிறகு பஞ்சபாண்டவர்களுக்கு நிம்மதியே இல்லை. கௌரவர்களும் நமது அண்ணன் தம்பிகள் தானே என்று நினைத்த பாண்டவர்கள் மிகவும் மன வேதனையாக இருந்தார்கள். அதனால் காந்தாரியை பார்க்க கிருஷ்ணர் உள்ளிட்ட பாண்டவர்கள் அனைவரும் சென்று இருக்கிறார்கள்.

 

100 பிள்ளைகளை இழந்த சோகத்தில் காந்தாரி இருக்கும் பொழுது கிருஷ்ணர் மீது காந்தாரிக்கு ஏகப்பட்ட கோபம் இருக்கிறது. கிருஷ்ணா நீ நினைத்திருந்தால் மகாபாரத போரே நடக்காமல் தடுத்து இருக்கலாம் எனது பிள்ளைகளும் உயிரோடு இருந்திருப்பார்கள் உன்னால் தான் எல்லாமே ஆயிற்று. நான் ஒரு மிகப்பெரிய சிவபக்தியாக இருந்தால் என் கணவனுக்கு நான் பத்தினியாக இருந்தால் நான் உனக்கு சாபம் விடுகிறேன் என சாபம் விடுகிறார் இன்றிலிருந்து 36 ஆண்டுகள் கழித்து நீயும் உன்னோட யாதவ குலமும் கடலில் மூழ்கும். நீயும் அழிவாய் என்று சாபம் விடுகிறார். சாபம் இட்ட பின்னர் தான் உணருகிறார் அய்யய்யோ இந்த மாதிரியான சாபத்தை கொடுத்து விட்டோமே என்று.

 

அதனால் கிருஷ்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் காந்தாரி. கிருஷ்ணனும் மிகவும் புன்சிரிப்புடன் விதி ஏற்கனவே எழுதப்பட்டது. உங்களால் அதை தடுக்க முடியாது. நீங்கள் அதை சொல்லும் ஒரு கருவி அவ்வளவுதான் என்று சொல்லுகிறார்.

 

அதேபோல் கிருஷ்ணனின் ஆட்சி என்று யாதவ குலம் நன்றாக இருக்கிறது. வியாசர் உள்ளிட்ட பல முனிவர்கள் கிருஷ்ணனை சென்று சந்தித்து வரலாம் என்று முடிவுடன் கிளம்புகிறார்கள்.

 

அங்கு கிருஷ்ணனை பார்க்க வந்த முனிவர்களிடம் அங்கு உள்ள சிறு பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் இவர்களை கேலி செய்யலாம் என்று பெண் வேடத்தில் வந்து அவர்களை கேலி செய்கிறார்கள். ஞான திருஷ்டியில் அறிந்த முனிவர்கள் அந்த இளைஞனை பார்த்து சாபம் விடுகிறார். பெண்ணாய் தானே வேடம் அணிந்தாய் இன்று இரவு உனக்கு ஒரு உலோகம் பிள்ளையாய் பிறக்கும். அந்த உலோகத்தினால் தான் இந்த யாதவ குலமே அழியும் என சாபம் கொடுக்கிறார்.

 

அந்த இளைஞர்கள் இதனை பொருட்படுத்திக் கொள்ளாமல் சென்று விட்டனர். அன்று இரவு அந்த பையனுக்கு ஒரு உலோகம் பிறக்கிறது. இது இருந்தால்தானே யாதவ குலம் அழியும் என்று சாபம் இட்டனர். இதனையே நாம் உடைத்து விடலாம் என்று சொல்லி அந்த உலோகத்தை தூள் தூளாக உடைக்கிறார்கள்.

 

அனைத்தையும் தூள் தூளாக உடைத்த அந்த இளைஞர்கள் முக்கோண வடிவிலான ஒரு தகடை மட்டும் அவர்களால் உடைக்க முடியவில்லை அதனால் அப்படியே எடுத்துக்கொண்டு அதனை கடலில் கலந்த விடுகிறார்கள்.

 

அனைத்து உலோகமும் ஒரு இடத்தில் சென்று அதிலிருந்து புற்களாய் முளைத்து பெரியதாக நிற்கின்றது. அது பார்ப்பவர்களுக்கு இலையாய் தெரியும். ஆனால் அது உலோகம். அந்த தகடு போன்ற வடிவம் மட்டும் ஒரு மீனின் வாயில் செல்கிறது. அந்த மீனை ஒரு வேடவன் பிடிக்கும் பொழுது அந்த வயிற்றிலிருந்து அந்த தகடை எடுத்து அவன் விலங்குகளை கொல்ல இதில் விஷம் தடவி விலங்குகளை கொல்ல இதனை பயன்படுத்திக் கொள்கிறான்.

 

இப்படி 36 வருடங்களும் கழிகிறது அனைத்து ஆண் மகன்களும் அருகில் உள்ள கடலுக்குச் சென்று அங்கு மது அருந்த செல்கிறார்கள். இப்பொழுது பாண்டவர்கள் தரப்பிலிருந்து போராடிய வீரர்களும் கௌரவ தரப்பிலிருந்து போராடிய வீரர்களுக்கும் இடையே சண்டை வருகிறது. வந்த சண்டையில் இரு தரப்பினரும் மாறி மாறி செடியை பிடுங்கி சண்டையிட்டு கொள்கிறார்கள் அது உலோகம் என்று தெரியாமலே அப்படி உலோகம் என்று தெரியாமலே சண்டையிடும் பொழுது அனைத்து ஆண் மகன்களும் அங்கு இறந்து விடுகிறார்கள்.

 

அந்த யாதவ குலத்தில் மிஞ்சி இருப்பது இரு ஆண்மகன்களே அவர்கள் தேரோட்டிகள். அந்த தேரோட்டிகள் உடனே இந்த விஷயத்தை கிருஷ்ணனிடம் சொல்லுகிறார்கள் உடனே கிருஷ்ணர் பலராமன் எங்கே என்று கேட்கின்றனர்.

 

உடனே அந்த தேரோட்டிகளிடம் கிருஷ்ணர் சொல்லுகிறார் நீங்கள் இந்த விஷயத்தை சொல்லி உடனே அஸ்தினாபுரத்துக்குச் சென்று அர்ஜுனனை அழைத்து வாருங்கள் என்கிறார். நான் பலராமன் தேடிச் செல்கிறேன் என்று அவர் சென்று விட்டார்.

 

அங்கு பலராமன் ஒரு மரத்துக்கு கீழே உட்கார்ந்து தியான நிலையில் இருக்கிறார் அப்படி தியான நிலையில் இருக்கும்பொழுது அவருடைய வாயிலிருந்து ஒரு ஐந்து தலை நாகம் கடலுக்கு அடியே போகிறது. இதனால் கிருஷ்ணர் உணர்ந்து கொள்கிறார் பலராமன் இந்த உலகை விட்டு பிரிந்து தனது பூத உடலை விட்டு பிரிந்து விண்ணுலகத்திற்கு சென்று விட்டார் என்று.

 

வந்த அர்ஜுனன் அனைத்து பெண்களையும் தாய்மார்களின் குழந்தைகளையும் அழைத்து அஸ்தினாபுரத்திற்கு செல்லலாம் என்று கூட்டிச் செல்கிறார். அப்படி இவர்களை பார்த்த அனைத்து கொள்ளையர்களும் இந்த பெண்களிடம் இருந்து நகைகளை பறிக்க வேண்டும் என்று போராடி அனைத்து பெண்களையும் துன்பப்படுத்தி கொன்று அந்த நகைகளை அவர்களிடமிருந்து எடுக்கிறார்கள். என்னதான் அர்ஜுனன் வில்லாதி வில்லன் என்றாலும் வயதாகி விட்டதால் அவரால் அம்பு தொடுக்க முடியவில்லை. மந்திரங்களும் நினைவில் இல்லை. அதனால் அனைத்து பெண்களும் தங்களை தங்களை எரித்து கொள்கிறார்கள். ஒருவர்கள் கடலில் சென்று விழுந்து விடுகிறார்கள். இதனால் அனைத்து பெண்களும் அங்கு இறந்து விடுகிறார்கள்.

 

இதை கிருஷ்ணன் இடம் சொல்லலாம் என்று அர்ஜுனன் அங்கிருந்து புறப்படுகிறார். ஒரு காட்டில் படுத்திருக்கிறார்.

அங்கு வந்த வேடன் காற்றில் கிருஷ்ணனின் காலை பார்த்தவுடன் அவனுக்கு மான் போல தெரியவும் அந்த தகடில் விஷத்தை தடவி அங்கிருந்து விடுகிறான். அது நேரடியாக கிருஷ்ணரின் காலில் குத்தி ரத்தம் வருகிறது.

 

அங்கு சென்று போய் பார்த்த வேடனுக்கு பெரும் சோகம் ஐயோ கிருஷ்ணா உன்னையே இப்படி செய்தேன் என்று அவர் இதற்கு பரிகாரமே இல்லையா என்று அழுகிறார். அதற்கு சிரிப்புடன் கிருஷ்ணர் சொல்லுகிறார் பயப்படாதே முன் ஜென்மத்தில் மறைந்திருந்து நான் உன்னை தாக்கிக் கொன்றேன். முன் ஜென்மத்தில் நான் ராமன் என்ற அவதாரம் தரித்தேன். அதில் மிகப்பெரிய வீரனாகிய வாலி என்ற உன்னை மறைந்திருந்து தாக்கினேன். அன்று மறைந்திருந்து தாக்கியதால் தான் இன்று உன் கையால் நான் இறக்கிறேன் இதை எழுதப்பட்ட விதி அதனால் நீ கவலைப்படாதே என சொல்கிறார்.

author avatar
Kowsalya