காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!!

0
272
#image_title

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!!

நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது தான் குடலின் மிக முக்கிய வேலை ஆகும். ஒருவேளை கழிவுகளை குடல் சரியாக வெளியேற்றாமல் விட்டால் அடி வயிற்று வலி, செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். ஒருவேளை குடலில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் தேங்கி இருந்தால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக பழுதாகத் தொடங்கிவிடும். எனவே கீழேகொடுப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை கடைபிடித்தால் குடலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி குடல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பட்டை

*சீரகம்

*மிளகு

*எலுமிச்சைசாறு

*தேன்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் 1 துண்டு பட்டை, 1/2 தேக்கரண்டி சீரகம், 5 மிளகு(இடித்தது) சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகவும். இவ்வாறு செய்தால் குடலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்த பானம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிப்பதோடு நாள் முழுவதும் சிறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றவும் உதவுகிறது.

Previous articleவயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!!
Next article7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!