பனிக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!

0
310
#image_title

பனிக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!

பனிக்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சலுக்கு பஞ்சம் இருக்காது. அதிகப்படியான குளிரை தாங்கி கொள்ளும் அளவிற்கு நம் உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இருக்கா என்றால் சந்தேகம் தான். இந்த பாதிப்பை சரி செய்ய தினமும் காலை நேரத்தில் 1 கிளாஸ் சூடான புதினா தேநீர் அருந்துவது நல்லது. இந்த புதினா தேநீர் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கக் கூடியது.

புதினா தேநீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

1)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி குளிர்காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் பாதிப்பை எதிர்த்து போராட உதவுகிறது.

2)வாய் துர்நாற்றத்தை போக்க தினமும் புதினா தேநீர் அருந்தி வரலாம்.

3)செரிமானக் கோளாறை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

4)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

5)அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

6)உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

7)வயிற்று வலி மற்றும் மாதவிடாய் பிடிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

8)உடலுக்கு தேவையான புத்துணர்வை அளிக்கிறது.

புதினா தேநீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*புதினா

*தேன்

*எலுமிச்சை சாறு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 10 புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அதில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து அருந்தவும்.