ஆயுசுக்கும் வாயு தொல்லை வராமல் இருக்க இதை 1 கிளாஸ் குடிங்க!! அனுபவ உண்மை!!
நாம் அதிகம் பாதிக்கப்படுவது வாயு தொல்லையால் தான்.இந்த வாயு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் தர்ம சங்கடமான சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பது தான் நிதர்சனம்.இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது மிகவும் அவசியம்.அதுவும் இயற்கை வழியில் தீர்வை தேடினால் மிகவும் சிறப்பு.
தேவையான பொருட்கள்:-
*சீரகம் – 1/2 தேக்கரண்டி
*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
*ஓமம் – 1/2 தேக்கரண்டி
*கல் உப்பு – 1 சிட்டிகை
*பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
செய்முறை:-
1.மிக்ஸி ஜாரில் சீரகம்,வெந்தயம்,ஓமம் ஆகிய 3 பொருட்களையும் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
2.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.
3.பின்னர் அரைத்து வைத்துள்ள சீரகம் + வெந்தயம் + ஓமம் பொடியை அதில் சேர்க்கவும்.அவை நன்கு கொதித்து 1 1/2 கப் தண்ணீர் 3/4 காப்பாக வரும் வரை காத்திருந்திருந்து அடுப்பை அணைக்கவும்.
4.பிறகு அதனை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.அதில் 1 சிட்டிகை அளவு கல் உப்பு சேர்த்து கரைக்கவும்.
5.அதையடுத்து 1 சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
உணவு உட்கொண்டு பின் ஒரு அரை மணி நேரம் கழித்து இந்த பானத்தை குடிக்கவும்.இப்படி செய்தோம் என்றால் வயிற்றில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடனடியாக வெளியேறி விடும்.
மற்றொரு முறை:-
தேவையான பொருட்கள்:-
*சுக்கு – 2
*கொத்தமல்லி – 4 தேக்கரண்டி
*மிளகு – 1/4 தேக்கரண்டி
*சீரகம் – 1/2 தேக்கரண்டி
*பனங்கற்கண்டு – சிறிதளவு
செய்முறை:-
1.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கொத்தமல்லி விதை,மிளகு,சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.பிறகு அடுப்பை அணைத்து அவற்றை ஆற விடவும்.
2.பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.அதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.
3.அதன் பின் அதே மிக்ஸி ஜாரில் சுக்கு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
4.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
5.இதையடுத்து அரைத்து வைத்துள்ள பொடிகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
6.அதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.அதன் பின் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும்.
இதை உணவு உண்ட 1/2 மணி நேரத்திற்கு பிறகு பருகுவது நல்லது.இப்படி செய்தோம் என்றால் வயிற்றில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடனடியாக வெளியேறி உடல் ஆரோக்கியம் பெறும்.