முதுகு வலி மற்றும் கை கால் பிடிப்பு நிரந்தரமாக குணமாக இதை 1 கிளாஸ் குடிங்க போதும்!!

0
35
#image_title

முதுகு வலி மற்றும் கை கால் பிடிப்பு நிரந்தரமாக குணமாக இதை 1 கிளாஸ் குடிங்க போதும்!!

பெரியர்வர்கள் முதல் சிறியர்கள் வரை அனைவருக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது முதுகு வலி தான்.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் இந்த வலி உணர்வு ஏற்படுகிறது.நவீன கால வாழ்க்கை முறை,ஆரோக்கியமற்ற உணவு முறை உள்ளிட்டவைகளால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் உண்டாகி வருகிறது.

இந்நிலையில் கொப்பரை தேங்காயை உணவில் எடுத்து வந்தோம் என்றால் நீண்ட நாள் முதுகு வலி,கை கால் பிடிப்பு உள்ளிட்டவை விரைவில் சரியாகி விடும்.அதேபோல் மூட்டு சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கும் இந்த தேங்காய் நல்ல தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

பசு நெய் -1 தேக்கரண்டி

கசகசா -1 தேக்கரண்டி

சோம்பு -1 தேக்கரண்டி

கொப்பரை தேங்காய் -சிறிய துண்டு (காய வைத்தது)

கற்கண்டு -தேவைக்கேற்ப

பால் – 1 டம்ளர்

செய்முறை:-

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து கொள்ள வேண்டும்.அதில் 1 தேக்கரண்டி
பசு நெய் ஊற்றி மிதமான தீயில் கசகசாவை சேர்க்க வேண்டும்.பிறகு 1 டம்ளர் பால் ஊற்றி அதில் சோம்பு,தேங்காய் போன்றவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.சர்க்கரை நோயாளிகள் கற்கண்டை சேர்க்காமல் இருப்பது நல்லது.பிறகு இவை சூடு தணிந்த பிறகு ஒரு டம்ளருக்கு மாற்றி பருக வேண்டும்.தொடர்ந்து இந்த ட்ரிங்க்கை எடுத்து வருவதன் மூலம் வலுவிழந்த மூட்டு மற்றும் எலும்புகள் இரும்பு போல் வலுப்பெறும். முதுகு வலி,கை கால் பிடிப்பு உள்ளிட்டவை விரைவில் சரியாகி விடும்.

* கசகசாவில் நார்ச்சத்து,மாங்கனீசு,கால்சியம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை இருக்கின்றது.

*சோம்பில் பொட்டாசியம்,கால்சியம்,அயன்,மெக்னீசியம்,செலினியம் அதிகளவு இருக்கின்றது.

*கொப்பரை தேங்காயில் வைட்டமின்,மினரல்ஸ்,அயன் போன்றவை இருப்பதினால் முழங்காலில் வலி ஏற்படுவதை தடுக்கின்றது.

*கற்கண்டு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இவை சளி,தொண்டை பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றது.