உடலில் தேங்கி கிடந்த கெட்டி சளி கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!

0
146
#image_title

உடலில் தேங்கி கிடந்த கெட்டி சளி கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!

பனிக்காலத்தில் சளி பாதிப்பு என்பது சாதாரண ஒன்று தான். இருந்தபோதிலும் அதை உடனடியாக குணப்படுத்திக் கொள்வது நல்லது. ஒருவேளை அலட்சியப்படுத்தினால் உடல் முழுவதும் சளி கோர்த்து பல வித தொந்தரவுகளை கொடுத்து விடும்.

உடல் உறுப்புகளில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப்படி ஒருமுறை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

சளியை கரைக்க தேவைப்படும் பொருட்கள்…

மிளகு, ஓமம், துளசி மற்றும் மஞ்சள்

செய்முறை…

பாத்திரம் ஒன்றில் 1 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி 1/4 தேக்கரண்டி ஓமம் மற்றும் 4 மிளகு இடித்து சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் 1/4 கைப்பிடி அளவு துளசி சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பு தீயை மிதமான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பின்னர் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அனைத்து விடவும்.

2 அல்லது 3 நிமிடங்கள் காத்திருந்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். தேன், சர்க்கரை போன்ற எதையும் சேர்க்கக் கூடாது. இந்த பானத்தை காலை, மாலை என எந்த நேரத்திலும் செய்து பருகலாம்.