நுரையீரலில் அடைபட்டு கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!
அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள்
நிறத்தில் காணப்படுதல் போன்றவை நுரையீரல் சளிக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த நுரையீரல் சளி பாதிப்பு நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தது விரைவில் குணப்படுத்தி விடலாம்.
தேவையான பொருட்கள்:-
*பால் – 1 கிளாஸ்
*இஞ்சி – 1 துண்டு
*மிளகு – 1 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
*தேன் – சிறிதளவு
செய்முறை:-
ஒரு உரலில் 1 துண்டு இஞ்சி போட்டு தட்டிக் கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி மிளகு சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றி கொள்ளவும். அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் கரு மிளகு துள் மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து குடிப்பதன் மூலம் நுரையீரலில் தேங்கி கிடந்த நாள்பட்ட சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.