குடலில் தேங்கி துர்நற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் நீங்க இதை 1 கிளாஸ் குடிங்க!

0
184
#image_title

குடலில் தேங்கி துர்நற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் நீங்க இதை 1 கிளாஸ் குடிங்க!

செரிக்காத உணவு, மலச்சிக்கல், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவற்றால் குடலில் கெட்ட வாயுக்கள் தேங்கி விடுகிறது.

இந்த கெட்ட வாயுக்களால் உடல் நலம் கெடுவதோடு அவை மனப்பிரச்னையாக உருவெடுத்து விடுகிறது. இந்த துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற வேண்டும் என்றால் நிச்சயம் சில இயற்கை வைத்தியத்தை செய்து பார்க்க வேண்டும்.

*வேப்பம்பூ
*இஞ்சி

வேப்பம்பூ கிடைத்தால் அதை காயவைத்து எடுத்துக் கொள்ளவும். அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய வேப்பம்பூ பொடியை கூட இதற்கு எடுத்துக் கொள்ளலாம்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் 1/4 கைப்பிடி அளவு வேப்பம்பூ அல்லது வெப்பம் பூ பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு 1 துண்டு இஞ்சியை தோல் நீக்கி சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி பருகவும். இந்த பானம் உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

*வேப்பம்பட்டை தூள்
*ஓமத் தூள்

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வேப்பம்பட்டை தூள் மற்றும் ஒரு ஸ்பூன் ஓமத் தூள் சேர்க்கவும்.

அடுத்து 1 கிளாஸ் தண்ணீர் எடுத்து அதில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். இந்த தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும்.

இந்த வேப்பம்பட்டை பானம் குடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்ற உதவுகிறது.

Previous articleநாட்டுக் கோழியில் ரசம் செய்வது எப்படி?
Next articleமூட்டு வலி: 7 நாளில் குணமாக்கும்.. பாட்டி வைத்தியம்..!