குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க!

0
161
#image_title

குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க!

இன்றைய உலகில் மலச்சிக்கல் பிரச்சனையால் பலரும் சிரமப்படுகின்றனர். தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதை இயற்கை வழியில் சரி செய்வதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*பெரு நெல்லிக்காய்

*தேன்

செய்முறை…

முதலில் 5 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்திக் கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும். அடுத்து இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலம் முழுவதும் இளகி வெளியேறிவிடும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்

*நெல்லிக்காய்

*புதினா

*இஞ்சி

*உப்பு

செய்முறை…

முதலில் 2 முதலில் பெரு நெல்லியை விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறு துண்டு இஞ்சி மற்றும் 5 அல்லது 6 புதினா இலைகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிதளவு உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*நெல்லிக்காய்

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் அதில் 2 நெல்லிக்காயை நறுக்கி போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.