உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் ஆரோக்கியம் பெற இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!!

Photo of author

By Divya

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் ஆரோக்கியம் பெற இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!!

உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் எளிதாக ஏற்பட்டு விடுகிறது.
ஆரோக்கியமற்ற உணவு, தூக்கமின்மை, மன அழுத்தம், வாழ்க்கை முறை, அதிக உணவு உட்கொள்ளுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் பல்வேறு நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடுகிறது.

உடலை குறைக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது தோல்வியில் தான் முடிகிறது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை பாலோ செய்தால் நிச்சயமாக உடலில் தேங்கி கடந்த கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

*கருஞ்சீரகம்

*சுக்கு பொடி

*ஓமப் பொடி

*மஞ்சள் தூள்

*தேன்

செய்முறை:-

முதலில் உரலில் 1 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1 துண்டு சுக்கு சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் 1/4 தேக்கரண்டி ஓமம் சேர்த்து இடித்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.

பிறகு அதில் இடித்து வைத்துள்ள சுக்கு, கருநீரகம், ஓமத்தை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக 1 சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து 2 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து இரவு தூங்குவதற்கு முன் பருக வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 1 மாதத்திற்கு பருகி வந்தோம் என்றால் உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து வெளியேறி விடும்.