மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

0
93
#image_title

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் செரிமானப் பிரச்சனை, உடல் நலக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் மலம் கழிக்க முடியாமல் தேங்கி இறுகி போய்விடும்.

இவ்வாறு இறுகி போன மலத்தை இளகி வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)தண்ணீர்
3)வெந்தயம்

செய்முறை:-

2 கொத்து வேப்பிலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கவும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த வேப்பிலை விழுது, வெந்தயத் தூள் சேர்த்து கொதிக்க விட்டு குடிக்கவும். இந்த வேப்பிலை கசாயம் மலக் குடலில் தேங்கி கிடக்கும் மலக் கழிவுகளை சில நிமிடங்களில் வெளியில் தள்ளிவிடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)விளக்கெண்ணெய்
3)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். பிறகு ஒரு கொத்து வேப்பிலையை அதில் கிள்ளி போடவும்.

1 கிளாஸ் தண்ணீர் நன்கு சுண்டி 1/2 கிளாஸாக வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி கொள்ளவும்.

இந்த வேப்பிலை தண்ணீரில் 3 சொட்டு விளக்கெண்ணெய் ஊற்றி குடித்தால் மலக் குடலில் தேங்கி கிடக்கும் மலக் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.

Previous articleசர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி?
Next articleஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!