இதை ஒரு கிளாஸ் குடித்தால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உங்களை சீண்டாது!! 100% பலன் உண்டு!!
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்த மூலிகை பாலை தினமும் குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
*பால்
*மஞ்சள் தூள்
*இலவங்கப்பட்டை தூள்
*மிளகு
*ஏலக்காய்
*தேன்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் உரலில் ஒரு ஏலக்காய்,ஒரு துண்டு இலவங்கப்பட்டை,நான்கு கருப்பு மிளகு சேர்த்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
இந்த பொடியை பாலில் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*பால்
*துளசி
*தேன்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் உரலில் 10 துளசி இலையை போட்டு இடித்து கொள்ளவும்.
இதை பாலில் போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.