முதுகு வலி, கை மற்றும் கால் பிடிப்பு 5 தினங்களில் குணமாக இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் பருகவும்!

0
249
#image_title

முதுகு வலி, கை மற்றும் கால் பிடிப்பு 5 தினங்களில் குணமாக இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் பருகவும்!

நம்மில் பலர் முதுகு வலி, கை கால் பிடிப்பு, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு உணவு பழக்கம், முறையற்ற தூக்கம், வேலைப்பளு உள்ளிட்ட வகை வகையான காரணங்கள் இருக்கின்றது.

இந்த பாதிப்புகளை சரி செய்ய வெள்ளை எள் மற்றும் பாதாம் பருப்பை பயன்படுத்துவது நல்லது.

வெள்ளை எள்ளில் கால்சியம், வைட்டமின் ஏ, ஈ, அயர்ன் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றது. இந்த வெள்ளை எள் எலும்பை இரும்பு போல் வலிமையாக்க உதவுகிறது. நரம்புகளில் தேங்கி கிடக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. மூட்டுகளுக்கு இடையே உள்ள ஜெல்லை அதிகப்படுத்தும் சக்தி வெள்ளை எள்ளிற்கு இருக்கின்றது.

பாதாம் பருப்பில் கால்சியம், செலினியம், போலிக் ஆசிட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கின்றது. பாதாம் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கீழ் வாதம், மூட்டு வலி உள்ளிட்டவை குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை எள் – 4 தேக்கரண்டி

*பாதாம் – 4

*பால் – 1 கிளாஸ்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 4 தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

வெள்ளை எள்ளை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனோடு 4 பாதாம் பருப்பு போட்டு நன்கு பொடித்து கொள்ளவும். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

அடுத்து 1 கிளாஸ் அளவு சூடான பாலில் தயார் செய்துள்ள வைத்துள்ள பொடி 1 தேக்கரண்டி அளவு போட்டு கலந்து இரவு உணவு உட்கொண்ட பின்னர் குடிக்கவும்.

Previous articleஇந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்குரிய அதிர்ஷ்ட எண் இவை தான்!
Next article2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர் இந்த நாளில் தங்கம் வாங்குவது நல்லது!