கொர் கொர் குறட்டை சத்தத்தை குறைத்து நிம்மதியாக உறங்க இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் குடியுங்கள்!!

0
226
#image_title

கொர் கொர் குறட்டை சத்தத்தை குறைத்து நிம்மதியாக உறங்க இதை ஒரு கிளாஸ் இரவு நேரத்தில் குடியுங்கள்!!

உங்களில் பலருக்கு இரவு நேரத்தில் குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் இருக்கும்.குறட்டை விட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கம் என்று அர்த்தம் கிடையாது.அவை உடலில் பல வித நோய் பாதிப்புகள் இருப்பதை உணர்த்தும் அறிகுறி ஆகும்.

உடல் பருமன்,உடல் சோர்வு போன்ற பல காரணங்களால் குறட்டை வருகிறது.இதனால் குறட்டை விடுபவர்கள் மட்டும் அல்ல அருகில் இருப்பவர்களுக்கும் நிம்மதியான தூக்கம் கிடைக்காது.

இந்த குறட்டை பாதிப்பில் இருந்து விடுபட இந்த பானத்தை இரவு தூங்கப் செல்வதற்கு முன் அருந்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – 1 கிளாஸ்
2)இலவங்கம் – 2
3)ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
4)தேன் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

உரலில் 2 இலவங்கத்தை போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.அதேபோல் ஒரு ஏலக்காயை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இடித்த இலவங்கம்,ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் பருகி வந்தால் குறட்டை சத்தம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும்.

Previous articleஇயற்கை விவசாயம்: செடிகளில் ஒரு பூச்சி தாக்குதல் கூட இருக்காது இந்த சக்தி வாய்ந்த கரைசலை தெளித்தால்!!
Next articleKerala Recipe: சுவையான வாழைக்காய் புட்டு கேரளா பாணியில் செய்வது எப்படி?