இதை ஒரு கிளாஸ் குடிங்க.. அப்புறம் பாருங்க தூக்கம் சொக்கி சொக்கி வரும்!
தூக்கம்… இவை சரியாக இல்லை என்றால் உடல் நலம் கெட்டுவிடும். குறைந்தது 8 மணி நேர தூக்கம் ஒருவருக்கு கிடக்கவில்லை என்றால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
இந்த தூக்கம் கெட பல காரணங்கள் இருக்கின்றது. வேலைப்பளு, மன அழுத்தம், மன சோர்வு, உடல் நலக் கோளாறு ஆகியவை தூக்கமின்மைக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.
*மருதம்பட்டை
*சீரகம்
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 மருதம்பட்டை மற்றும் சீரகம் 1 ஸ்பூன் சேர்க்கவும். பிறகு அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.
இந்த பானம் நிம்மதியான தூக்கத்தை கொடுக்க வல்லது.
*பால்
*பாதாம் பருப்பு
*கசகசா
*நாட்டு சர்க்கரை
*முந்திரி
*ஏலக்காய்
ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் பால் ஊற்றி 4 பாதாம் பருப்பு பொடி, 1 ஸ்பூன் கசகசா, முந்திரி துண்டு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து இரவு நேரத்தில் கலந்து பருகவும்.
இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியும்.