கல்லீரலை பலப்படுத்த மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த தினமும் “சாமந்தி பூ டீ” பருங்குங்கள்!!

Photo of author

By Divya

கல்லீரலை பலப்படுத்த மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த தினமும் “சாமந்தி பூ டீ” பருங்குங்கள்!!

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழந்தால் அதற்கு கொழுப்பு நிறைந்த உணவு, அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும். இந்த கல்லீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.

இந்த பாதிப்புக்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது நல்லது. சாமந்தி பூவில் அதிகளவு ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கிறது. அதன்படி சாமந்தி பூவில் டீ செய்து பருகினால் கல்லீரல் பலப்படும். அதுமட்டும் இன்றி செரிமானக் கோளாறை சரி செய்வதிலும் இந்த சாமந்தி பூவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சாமந்தி பூ

*தண்ணீர்

*தூயத் தேன்

சாமந்தி பூ டீ செய்யும் முறை…

2 அல்லது 3 சாமந்தி பூவை வெயில் அல்லது நிழலில் காயவைத்து உலர்திக் கொள்ளவும். பின்னர் இந்த சாமந்தி பூவில் இருந்து 2 தேக்கரண்டி அளவு இதழ்களை எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் உலர்த்தி வைத்துள்ள சாமந்தி பூ இதழை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பூவின் நிறம் தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த நீரை ஒரு கிளாஸ்க்கு வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து கலக்கி பருகவும். இந்த தேநீரை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து பருகி வருவதன் மூலம் கல்லீரல் பலப்படும். அதுமட்டும் இன்றி ஜீரண சக்தி மேம்படும்.