நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த கசாயம் குடிங்க..!!
சாதாரண இருமலுடன் சளி வந்தால் சில நாட்களில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி பாதிப்பாக இருந்தால் உடனடியாக சரியாகாது. சளியின் நிறத்தை வைத்தே அவை சாதாரண சளியா? இல்லை நெஞ்சு சளியா? என்று அறிந்து கொள்ள முடியும்.
நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:-
*மூக்கடைப்பு
*உடல் சோர்வு
*விடாத இருமல்
*அடர் மஞ்சள் நிற சளி
*தலைபாரம்
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு
*தேன்
*தண்ணீர்
*மிளகு
*மஞ்சள்
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 5 அல்லது 6 இடித்த மிளகு, 1 சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இவ்வாறு செய்தால் நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.
மற்றொரு தீர்வு:-
*கற்பூரவல்லி இலையில் கசாயம் செய்து அருந்தினால் நெஞ்சு சளி பாதிப்பு குணமாகும்.
*சூடான தேங்காய் எண்ணெயில் 1 துண்டு கற்பூரத்தை சேர்த்து கரைத்து மார்பில் தடவினால் நெஞ்சு சளி கரைந்து விடும்.