நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!!

0
164
#image_title

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!!

ஆரம்ப நிலையில் சாதாரண சளியாக உருவாகி நாளடைவில் நெஞ்சு சளி, நுரையீரல் சளியாக தொற்றி பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது.

இந்த நாள்பட்ட சளி பாதிப்பை சில நிமிடங்களில் கரைத்து வெளியேற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் உடனடி பலன் கிடைக்கும்.

சளி பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?

குளிரூட்டபட்ட பொருட்களை உண்ணுதல், அதிக இனிப்பு உண்ணுதல், மழை காலங்களில் சளி பாதிப்பு ஏற்படுதல், குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்தல்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்.

மார்பு சளிக்கான அறிகுறிகள்?

அதிக சளி, வறட்டு இருமல், தும்மல், நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு
மஞ்சள் நிறத்தில் கெட்டி சளி வெளியேறுதல், இளைப்பு மற்றும் உடல் சோர்வு, காய்ச்சல் வருவது போல் உணர்வு, .தலைவலி மற்றும் தலை பாரம்

மூலிகை கசாயம் தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*ஓமவல்லி(கற்பூரவல்லி)

*தூதுவளை

*துளசி

*இஞ்சி

*மிளகு

செய்முறை…

ஒரு பாத்திரத்தில் 2 ஓமவல்லி, 3 தூதுவளை இலை மற்றும் 10 முதல் 15 துளசி இலைகளை போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு உரல் அல்லது அம்மியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு சிறு துண்டு இஞ்சி மற்றும் 3 முதல் 4 மிளகை சேர்த்து இடித்து ஒரு கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தூதுவளை, ஓமவல்லி, துளசி விழுதை அதில் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அதில் இடித்து வைத்துள்ள இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி மிதமான சூட்டில் பருகினால் சளி, இருமல் பாதிப்பு உடனடியாக சரியாகும்.

Previous articleஉங்களுக்கு கருப்பான அக்குள் இருக்கா! அதை குணப்படுத்த இதோ சில வழிகள் !!
Next articleதீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் “தயிர்”!! எவ்வாறு பயன்படுத்துவது..?