வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட வாயுக்கள் நீங்க இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்..!!
இன்றைய உலகில் பெரும்பாலனோர் வாய் ருசிக்காக மட்டுமே உணவு உண்கிறார்கள். இதனால் வயிறு கெட்டுவிடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. வயிறு ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். ஒருவேளை வயிறு கெட்டுவிட்டால் வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கி விடும்.
வாயுத் தொல்லை ஏற்பட காரணம்:-
துரித உணவு உண்ணுதல், மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவு உண்ணுதல், வயிறு மந்த நிலையை அடைவது, மூச்சு பிடிப்பு, வயிற்றுப் போக்கு
வயிறு உப்புசம், வயிற்றுப் பிடிப்பு.
வாயு தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்:-
தேவையான பொருட்கள்:-
*ஓமம்
*வெந்தயம்
*சீரகம்
*சுக்கு
*கொத்தமல்லி விதை
செய்முறை…
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/4 தேக்கரண்டி ஓமம், 1/4 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் 2 தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். இவ்வாறு செய்தால் வயிற்றில் தேங்கி கிடந்த வாயுக்கள் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.