மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த ட்ரிங்க் ஒருமுறை குடிங்க!

Photo of author

By Divya

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த ட்ரிங்க் ஒருமுறை குடிங்க!

ஒருவருக்கு சளி பாதிப்பு ஏற்பட்டால் அவை எளிதில் குணமாகாது. பலவித தொந்தரவுகளை கொடுத்த பின்னர் தான் சற்று அவை குறையும். இவ்வாறு தேங்கி கிடக்கும் நாள்பட்ட மார்பு சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:

1)சுக்கு
2)கொத்தமல்லி விதை
3)மிளகு
4)துளசி
5)வெற்றிலை
6)தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து மிளகு, கொத்தமல்லி விதை மற்றும் தோல் நீக்கிய சுக்கை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு துளசி 1/4 கைப்படி அளவு, வெற்றிலை 2 துண்டு போட்டு கொதிக்க விடவும். அதனை தொடர்ந்து அரைத்த பொடி 2 தேக்கரண்டி அளவு போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் மார்பு பகுதியில் தேங்கி கிடந்த சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.