அசிங்கமாக தொங்கும் தொப்பையை கரைக்க இந்த மூலிகை நீரை குடிங்கள்!

Photo of author

By Divya

அசிங்கமாக தொங்கும் தொப்பையை கரைக்க இந்த மூலிகை நீரை குடிங்கள்!

வயிற்று தொப்பையால் உடலில் பல நோய்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக சுவாச பிரச்சனை, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் தொப்பையை குறைக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)இஞ்சி
3)பட்டை
4)சீரகம்
5)கற்றாழை

செய்முறை:-

ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு துண்டு இடித்த இஞ்சி, ஒரு துண்டு பட்டை, 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்க்கவும்.

அதன் பின்னர் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதை ஒரு இரவு ஊற விட வேண்டும். மறுநாள் காலையில் இந்த வெந்தயம், பட்டை, சீரகம், இஞ்சி ஊற வைத்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை அதில் போட்டு கலந்து குடிக்கவும். இந்த மூலிகை நீர் வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பை கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய்
2)தான்றிக்காய்
3)நெல்லிக்காய்

செய்முறை:-

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இல்லாத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கிக் கொள்ளவும்.

ஒரு கிளாஸ் அளவு நீரை கொதிக்க வைத்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கலந்து குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப் பகுதியில் தேங்கி கிடந்த தொப்பை கொழுப்பு முழுமையாக குணமாகும்.