கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!!

0
182
#image_title

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!!

உடல் எலும்பிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காவிட்டால் கை கால் மற்றும் மூட்டுகளில் வலி எடுக்க ஆரம்பித்து விடும்.இந்த தொந்தரவுகளில் இருந்து மீள கருப்பு எள்ளுடன் இரண்டு பொருட்களை அரைத்து பாலில் கலந்து குடிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)பால் ஒரு கிளாஸ்
2)கருப்பு எள் ஒரு ஸ்பூன்
3)பாதாம் ஐந்து
4)முந்திரி ஐந்து

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து மிதமான தீயில் 1 அல்லது 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.எள் கருகிவிட்டால் அதிக கசப்பு ஏற்பட்டு விடும்.எனவே எள் பொரியும் சத்தம் கேட்டதும் எடுத்து விடவும்.

அதன் பின்னர் அதே வாணலியில் ஐந்து பாதாம் பருப்பு மற்றும் ஐந்து முந்திரி பருப்பு போட்டு குறைவான தீயில் 2 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.

வறுத்த எள்,பாதாம் மற்றும் முந்திரியை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி குறைவான தீயில் நன்கு காய்ச்சவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அரைத்த எள் கலவையை சேர்த்து கலக்கி குடிக்கவும்.

இந்த பாலை தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் குடித்து வந்தால் மூட்டு வலி,கை கால் வலி முழுமையாக குணமாகும்.

Previous articleகிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!!
Next articleஅடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!!