உடல் உயரம் அதிகரிக்க இந்த ஒரு பவுடரை பாலில் கலந்து குடிங்க!

Photo of author

By Divya

உடல் உயரம் அதிகரிக்க இந்த ஒரு பவுடரை பாலில் கலந்து குடிங்க!

இன்றைய காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் எடை மற்றும் உயரத்தை அதிகரிக்க விளம்பரங்களில் காட்டும் பவுடர்களை வாங்கி கொடுக்கின்றனர். ஆனால் இதனால் எந்த வித பயணம் இல்லை.

உடல் உயரம் மற்றும் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு ஊட்டச்சத்து பவுடர் தயாரித்து பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)எள்
2)பாதாம்
3)சோம்பு
4)தாமரை விதை
5)கருப்பு உளுந்து

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 கப் பாதாம் பருப்பு போட்டு வறுத்து எடுக்கவும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி எள், ஒரு தேக்கரண்டி கருப்பு உளுந்து, ஒரு தேக்கரண்டி சோம்பு போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு தாமரை விதை 1/2 கப் அளவு போட்டு கருகிடாமல் வறுத்து எடுக்கவும். வறுத்த அனைத்து பொருட்களையும் ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும். பால் நன்கு கொதித்து வந்த பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அரைத்த ஊட்டச்சத்து பொடி 2 தேக்கரண்டி அளவு கலந்து குடிக்கவும். இந்த ஊட்டச்சத்து பவுடர் குழந்தைகளின் உடல் உயரத்தை மளமளவென உயர்த்த உதவும்.