சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதை தவறாமல் குடித்து வாருங்கள்!

0
109
#image_title

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதை தவறாமல் குடித்து வாருங்கள்!

வெயில் தாக்கம் அதிகம் இருந்தால் உடலில் சூடு அதிகரிக்கும். இதனால் உடல் உஷ்ணம், சூட்டு கொப்பளம் போன்றவை ஏற்படும். இதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ராகி கூழ் செய்து சாப்பிடுங்கள்.

ராகியில் அதிகளவு நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், அயோடின் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. ராகியில் கூழ் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், மன அழுத்தம் குறையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி மாவு
2)சீர்கத் தூள்
3)மோர்
4)உப்பு
5)சின்ன வெங்காயம்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 200 கிராம் ராகி மாவு சேர்த்து 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி கட்டி படாமல் கரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை ஊற்றி கிளறவும்.

ராகியின் பச்சை வாடை நீங்கியதும் 1/4 தேக்கரண்டி சீரகத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ராகி கூழில் சிறிது நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து குடிக்கவும். கோடை காலத்தில் அடிக்கடி ராகி கூழ் செய்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.