உடல் ஸ்லிம்மாக தினமும் இந்த டீ பருகுங்கள்! நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்!

0
76
#image_title

உடல் ஸ்லிம்மாக தினமும் இந்த டீ பருகுங்கள்! நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்!

கொழுப்பு உணவுகள்,துரித உணவுகளால் உடல் எடை மளமளவென கூடிக் கொண்டே செல்லும். சர்க்கரை நோய் போன்ற ஹெல்த் இஸ்யூ இருந்தாலும் உடல் எடை கூடும்.இந்த கட்டுக்கடங்காத உடல் பருமால் உடல் ஆரோக்கியம் கெடுவதோடு உடல் அழகும் கெடும்.

உடல் எடையை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி,நடைப்பயிற்சி போன்றவை செய்வதோடு கூடவே ஆரோக்கிய பானங்களையும் அருந்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)இஞ்சி
2)மஞ்சள்
3)எலுமிச்சை சாறு
4)புதினா
5)கொத்தமல்லி விதை
6)ஏலக்காய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பிறகு அதில் ஒரு துண்டு நசுக்கிய இஞ்சி மற்றும் இடித்த ஏலக்காய் ஒன்று சேர்க்கவும்.

அதன் பின்னர் அதில் சிட்டிகை மஞ்சள் தூள்,ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் 5 புதினா இலை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை நேரத்தில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.