1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!!

0
115
#image_title

1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!!

வைரஸ் தொற்று,காலநிலை மாற்றம்,சுவாசக் கோளாறு போன்ற காரணங்களால் நுரையீரலில் சளி கோர்த்துக் கொள்கிறது.

சளி பாதிப்பு ஏற்படத் தொடங்கி விட்டால் கூடவே இருமல்,காய்ச்சல்,தொண்டை வலியும் ஏற்படும்.அதிகப்படியான சளியால் மூச்சு விடுதலில் சிரமம்,தூக்கமின்மை ஆகியவை ஏற்படும். இந்த சளியை கரைத்து வெளியேற்ற பழங்கால மருத்துவத்தை கையில் எடுப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு
2)சுக்கு
3)துளசி

செய்முறை:-

உரலில் ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கு சேர்த்து இடித்துக் கொள்ளவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.

அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி மிளகு போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பிறகு இடித்த மிளகு மற்றும் சுக்கு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.இதனை தொடர்ந்து ஒரு கைப்பிடி அளவு துளசி சேர்த்து கொதிக்க விடவும்.நீரில் சேர்த்த 3 பொருட்களும் நன்கு கொதித்து பாதியாக சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுமையாக கரைந்து வெளியேறும்.வறட்டு இருமல்,காய்ச்சலை கூட மிளகு கசாயம் குணப்படுத்தும்.