2 நிமிடங்களில் உடல் அசதி உடல் சோர்வு அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இதை குடியுங்கள்!!

Photo of author

By CineDesk

2 நிமிடங்களில் உடல் அசதி உடல் சோர்வு அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இதை குடியுங்கள்!!

நமக்கு இருக்கக்கூடிய உடல் சோர்வு, உடல் அசதி, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு என அனைத்தையும் சரி செய்யக்கூடிய அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த ஒரு இயற்கை மருத்துவர் குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம். சில பேர் சிறிது நேரம் வேலை செய்தாலே உடல் மிகவும் சோர்வடைந்து அசதியாக காணப்படுபவர். வெயிலில் சென்று வந்தால் மயக்கம் வருவது போல் காணப்படுவது மிகவும் உடல் சோர்வுடன் காணப்படுவது என அனைத்தையும் சரி செய்யக்கூடிய ஒரு மருந்தை பற்றி தான் இங்கு காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:
வெல்லம்
ஏலக்காய்

செய்முறை:
இதற்கு வெள்ளையாக இருக்கும் வெல்லத்தை பயன்படுத்தக் கூடாது மண்டை வெல்லத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு டம்ளரில் இந்த வெள்ளத்தை சிறிது சிறிதாக தூள் செய்து சேர்த்துக் கொண்டு அதனுடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். இதோடு ஒரு பின்ச் அளவு ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளவும்.

இவை இரண்டையும் தண்ணீரில் நன்றாக கலந்து விடவும். இந்த முறையானது அந்த காலங்களில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு எளிமையான வைத்தியம் தான். இதை காலை முதல் இரவு வரை எப்பொழுது வேண்டுமானாலும் ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை குடித்து வந்தால் உடம்பிற்கு உடனடியாக ஒரு தெம்பு கிடைக்கும்.

மேலும் இதைத் தொடர்ந்து மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு குடித்து வர உடம்பில் உள்ள ஹீமோகுளோபின் குறைபாடு சரியாகும். குழந்தை பிறப்பிற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் இதை வெறும் தண்ணீரில் கலந்து குடிக்காமல் பாலில் கலந்து குடிக்க வேண்டும். மேலும் கரு மூன்று மாத வளர்ச்சியில் இருக்கும் போதும் பாலில் கலந்து தான் குடிக்க வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை குறிப்பு ஒரு வேளைக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இதே அளவை வைத்து ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை இவ்வாறு செய்து குடித்து வரலாம் அல்லது இதை காலையிலேயே நிறைய செய்து வைத்து விட்டு அந்த நாள் முழுவதும் குடித்து வரலாம்.

பொருட்களின் பயன்கள்:
வெல்லத்தில் அதிகமான இரும்பு சத்துக்கள் உள்ளது குறிப்பாக மண்டை வெல்லத்தில் ஏராளமான இரும்பு சத்துக்கள் உள்ளது. இது நம் உடம்பிற்கு உடனடியான ஒரு ஆற்றலை வழங்கும். மேலும் உடம்பில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் குறைபாட்டை உடனடியாக சரி செய்யும் சக்தி இந்த வெல்லத்திற்கு உள்ளது.

இதில் ஏலக்காய் பொடி சேர்ப்பதனால் நறுமணத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சியையும் இது அளிக்கும். மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். மேலும் உடல் சோர்வு உடல் அசதி உடல் வலி என அனைத்தையும் நொடியில் சரி செய்யும்.