பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

0
39
#image_title

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

நாம் அதிகம் சுவைத்து உண்ணும் கனி வகைகளில் ஒன்று நெல்லி.இதில் பெரு நெல்லி,சிறு நெல்லி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த இரண்டு வகைகளுமே புளிப்பு,இனிப்பு மற்றும் துவர்ப்பு தன்மையை கொண்டிருக்கிறது.இந்த இரண்டு வகைகளில் பெரு நெல்லியில் தான் கால்சியம்,வைட்டமின் சி,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது.இந்த நெல்லி கனியில் ஜூஸ் செய்தோ,தேனில் ஊற வைத்தோ உண்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்க கூடும்.

தினமும் பெரு நெல்லி ஜூஸ் குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் அற்புத பலன்கள்:-

*நெல்லி கனியில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால் இவற்றை உண்ணும் பொழுது எலும்புகள் உறுதியாகும்.

*இரத்த சோகை நோய் பாதிப்பு இருக்கும் நபர்கள் அடிக்கடி நெல்லி ஜூஸ் பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

*நெல்லிக்காய் இருமல்,சளி உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

*செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் பாதிப்பு இருக்கும் நபர்கள் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் பருகத் தொடங்குங்கள்.

*ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு கண் பார்வையை தெளிவாக்க இந்த பெரு நெல்லி ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.

*உடல் பருமனால் அவதிப்படும் நபர்கள் வெறும் வயிற்றில் நெல்லி ஜூஸ் பருகி வருவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறி விடும்.

*கூந்தலை கருமை மற்றும் அடர்த்தியாக வளர வைக்க நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.

*தினமும் நெல்லி ஜூஸ் பருகி வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

*கண் பார்வை மேம்பட அவசியம் நெல்லி கனியை சாப்பிட வேண்டும்.

*குடல் புண் பாதிப்பு இருபவர்கள் அடிக்கடி நெல்லி சாறு பருகினால் அவை விரைவில் ஆறாத் தொடங்கி விடும்.