காதுகளுக்கு இயர் பட்ஸ் யூஸ் பண்றவங்களாக நீங்கள்! அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

0
198
#image_title

காதுகளுக்கு இயர் பட்ஸ் யூஸ் பண்றவங்களாக நீங்கள்! அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

நம் உடல் உறுப்புகளில் முக்கியமான உறுப்பு காது. இதை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்கும் பழக்கம் அனைவரிடத்திலும் உண்டு. காதுகளை சுத்தம் செய்ய ஊக்கு, கோழி இறகு, இயர் பட்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. பொதுவாக காதுகளில் எந்த ஒரு பொருளையும் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. காதில் உள்ள அழுக்குகள் தானாக வெளியேறுவது நல்லது.

ஆனால் காதுகளில் அதிக அழுக்கு சேர்ந்தால் பிப்பு ஏற்படும். இதனால் காதுகளை சுத்தம் செய்யாமல் நம்மால் இருக்க முடியாது.

காது அழுகை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தும் இயர் பட்ஸ் ஒருவித சுக உணர்வை கொடுப்பதினால் அதை பயன்படுத்தும் நபர்கள் அதிகமே. ஆனால் இந்த இயர் பட்ஸ் அதிக ஆபத்து நிறைந்த பொருள் ஆகும்.

காது குடைச்சல் அதிகமாக இருந்தால் இயர் பட்ஸ் கொண்டு இஷ்டத்துக்கு காதுகளில் விட்டு ஆட்டுகிறோம். இதனால் காதின் ஆரோக்கியம் விரைவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டு விடும். அதுமட்டும் இன்றி காதுகளில் இருக்கும் அழுக்கு இன்னும் உள் சென்று விடும்.

இயர் பட்ஸ் அடிக்கடி பயன்படுத்துவதால் காதினுள் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. காதுகளில் உள்ள நரம்பு அதிகளவில் பாதிக்கப்படுகிறது.

இயர் பட்ஸ் பயன்படுத்துவதினால் காதுகளில் காயம் ஏற்பட்டு இரத்தம், சீல் பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

காது ஜவ்வு சேதமடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் கேட்கும் திறன் விரைவில் குறைந்து விடும்.

Previous articleகிலோ கணக்கில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!
Next article2024 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்!!