சுவையான டேஸ்ட்டுடன் சூடாக சாப்பிட வாங்க..ஈஸி வெஜ் பிரியாணி!..
இதற்கு முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம். தேவையான பொருள்கள்,அரிசி – 2 டம்ளர், கேரட் – 4, பீன்ஸ் – 4, காலிப்ளவர் – தேவைக்கேற்ப, தக்காளி – 2, வெங்காயம் – 2, சோயாபீன்ஸ் – ஒரு கப், கரம் மசாலா, மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி, அரைக்க, கொத்தமல்லிதழை – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 5, பச்சை மிளகாய் – 6, புதினா – சிறிதளவு, கிராம்பு, கசகசா – சிறிதளவு, தாளிக்க:, பட்டை, பிரியாணி இலை, நெய், சோம்பு, ஏலக்காய்
வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்..செய்முறை, முதலில் தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.குக்கரில் நெய் விட்டு பிரியாணி இலை, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு இவைகளைப் போட்டு வதக்கவும்.பிறகு நறுக்கின பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து, இதனுள் போடவும் 10 நிமிடம் சிம்மில் வைத்து நன்கு கலக்கவும். இதனுடன் தக்காளி சேர்க்கவும். தக்காளியும், கலவையும் நன்கு வதங்க வேண்டும்பின்னர் அதனுடன் கேரட், பீன்ஸ், காலிப்ளவர், சோயாபீன்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.பின் ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.ஒரு விசிலுக்கு பின்னர் கேஸை சிம்மில் வைத்து, பத்து நிமிடத்திற்கு பின்னர் எடுத்து சூடாக பரிமாறலாம்.