நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!              

0
135

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!

 

வாழும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்தஒரு தீமைகளும் நெருங்காது.

மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்பார்கள். மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்கு சொன்னார். நந்தி மற்றவர்களுக்கு சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன.மாத சிவராத்திரியானது தேய்பிறை சதுர்த்தசி இரவு கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி நாளில் சிவபக்தர்கள் விரதம் இருந்தும், சிவாலயம் சென்று இரவு கண் விழித்தும் எம்பெருமானை தூங்காமல் வழிபடுவார்கள்.

சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.திருவைக்காவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரக்கூடியது. சிவராத்திரி விரதமானது வயது, இன, மத வேறுபாடுகளைக் கடந்த எல்லோரும் செய்யக் கூடியது ஆகும்.சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.சிவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் புத்திர தோஷம், திருமணத்தடை என அனைத்து துன்பங்களும் நீங்கும்.

 

author avatar
Parthipan K