பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு மற்றும் மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க எளிய வழி!!

0
128
#image_title

பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு மற்றும் மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க எளிய வழி!!

நம் வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, அழுக்கு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை சரி செய்ய ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் நீக்கி விடலாம்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*போராக்ஸ் தூள்

*ஸ்கிரப்பிங் ஸ்பான்ச்

செய்முறை:-

போராக்ஸ் சிறந்த கிருமி நீக்கியாக பயன்படுகிறது. ஈரமான ஸ்பாஞ்சை போராக்ஸ் தூளில் தோய்த்து பாத்ரூமில் உள்ள டைல்ஸில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் மஞ்சள் கறைகள் மீது நன்றாக ஸ்கிரப் செய்யவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நாள்பட்ட அழுக்கு மற்றும் மஞ்சள் கறைகள் முழுமையாக நீங்கி விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*சமையல் சோடா – தேவையான அளவு

*ஸ்கிரப்பிங் ஸ்பான்ச்

செய்முறை:-

பாத்ரூம் படிந்துள்ள மஞ்சள் கறைகள் மீது சமையல் சோடாவை தூவி விடவும். இதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பின்னர் ஒரு பாத்ரூம் பிரஷ் அல்லது ஸ்கிரப்பிங் ஸ்பான்ச் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால் மஞ்சள் கறை, அழுக்கு மற்றும் உப்பு கறை நீங்கி பாத்ரூம் பளிச்சிடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை பழம்

*தூள் உப்பு

*வாஷிங் பவுடர்

செய்முறை:-

ஒரு பவுலில் தேவையான அளவு எலுமிச்சம் பழச் சாறு, தூள் உப்பு மற்றும் வாஷிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை ஓரு ஸ்க்ரப்பரில் போட்டு பாத்ரூமில் படிந்துள்ள மஞ்சள், உப்பு கறைகள் மீது தேய்த்து கொள்ளவும். பின்னர் 20 முதல் 30 நிமிடம் வரை ஊற விடவும். பிறகு தண்ணீர் கொண்டு பாத்ரூம் முழுக்க சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்தால் சில நிமிடங்களில் பாத்ரூம் டைல்ஸ் புதிது போன்று பளிச்சிடும்.