80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

Photo of author

By Divya

80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

வயதானாலும் இளமையாக இருக்க உதவும் இயற்கை வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்…

*வெந்தயம்
*கருப்பு எள்
*கருப்பு சுண்டல்
*வெல்லம்

செய்முறை…

அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் வெந்தயம், ஒரு கப் கருப்பு எள், ஒரு கப் கருப்பு சுண்டல் சேர்த்து லேசாக வறுக்கவும்.

இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் வெல்லம் சேர்த்து அரைத்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும்.

பிறகு கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து கொள்ளவும்.

இந்த உருண்டை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். இதை தினமும் சாப்பிட்டு வந்தால் முதுமையை தள்ளி போடலாம்.

தேவையான பொருட்கள்…

*ராகி
*பார்லி
*நாட்டு சர்க்கரை
*கருப்பு உளுந்து
*பாதாம்
*முந்திரி
*வேர்க்கடலை

செய்முறை….

அடுப்பில் வாணலி வைத்து அரை கப் ராகி, அரை கப் பார்லி, அரை கப் கருப்பு உளுந்து, கால் கப் பாதாம், கால் கப் முந்திரி மற்றும் ஒரு கப் வேர்க்கடலை சேர்த்து லேசாக வறுக்கவும்.

இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும்.

பிறகு கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து கொள்ளவும்.

இந்த உருண்டை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். இதை தினமும் சாப்பிட்டு வந்தால் இழந்த இளமையை மீட்டு விடலாம்.