90 வயதிலும் எலும்பு எக்கு போல் வலிமையாக இருக்க இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!!

0
430
#image_title

90 வயதிலும் எலும்பு எக்கு போல் வலிமையாக இருக்க இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!!

உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டும்.அதற்கு எலும்பிற்கு தேவையான கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும்.

கால்சியம் சத்து குறைந்தால் இளமை காலத்திலேயே மூட்டு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி,கை கால் வலி ஆகிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே எலும்பில் கால்சியம் சத்து அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சத்து உருண்டையை செய்து சாப்பிட்டு வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆரியம்(ராகி) மாவு – 1 கப்
2)ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
3)முந்திரி பருப்பு – 10
4)நெய் – சிறிதளவு
5)உப்பு – தேவையான அளவு
6)வேர்க்கடலை – 1/2 கப்
7)நாட்டு சர்க்கரை

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிதளவு நெய் சேர்த்து சூடாக்கவும்.அதன் பின்னர் ஒரு கப் ராகி மாவு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.

அதன் பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.பிறகு அதே வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரி மற்றும் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.பிறகு அதில் 1 ஏலக்காய்,1/4 கப் நாட்டு சர்க்கரை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி கையில் சிறிது நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.இந்த உருண்டையை தினமும் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

Previous articleமுடி உதிர்தல் நிற்க இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்!! நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!!
Next articleடிகிரி முடித்தவர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 5 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!