தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி!

0
299
#image_title

தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி!

தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தகவல் அறியும் உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் பத்திரம் என்பது கார்ப்பரேட்டுகளும், நிதி நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் நன்கொடை வழங்கும் திட்டமாகும். கடந்த 2017 – 2018 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு திட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதாவது தனிநபர்கள் , நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு இந்த பத்திரங்களில் வாங்குபவர்களின் பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்கள் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்பதாகும்.

அதன்படி அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகளை பெற்றன. தற்போது இந்த சர்ச்சை பெருமளவில் நீடிக்கும் நிலையில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி பொது நல வழக்குகள் தொடரப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரச அரசியல் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தகவல் அறியும் உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது. தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது. தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்கள் அது உரிமையை பறிக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுத்த வேண்டும். இதுவரை பெறப்பட்ட தேர்தல் நிதி பத்திர விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

author avatar
Preethi