தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!!

Photo of author

By Parthipan K

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!!

Parthipan K

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!!

ஒரே முறையில் வாய் துர்நாற்றம் நிரந்தரமாக சரியாகிவிடும்.நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பற்கள் இடையில் சிக்குவதால் வாய் துர்நாற்றம் என்பது ஏற்படுகிறது.

இந்த வாய் துர்நாற்றத்தை சில தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் நீங்கலாம். அவை எப்படி என பார்க்கலாம்.நாம் நிறைய பேர் இந்த வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு இருப்போம். வாய் துர்நாற்றம் ஒரு மிகப்பெரிய தொந்தரவாகும். இது நம்மளுக்கு மட்டும் பிரச்சினையாக இருப்பதோடு அடுத்தவர்களுக்கும் பிரச்சனையாக அமைகிறது.

வாய் துர்நாற்றம் இருந்தால் நம்மால் மற்றவர்களிடம் சகஜமாக பேசக் கூட முடியாது. வாய்வழி விரிசல், ஈறு கோளாறுகள், தவறான பற்களின் சுகாதாரம் மற்றும் பூசப்பட்ட நாக்கு ஆகியவை வாய்துர்நாற்றத்தை உண்டாக்கும் விஷயங்களாக உள்ளது. இந்த வாய் துர்நாற்றம் ஏற்பட பிற காரணங்களும் இருக்கிறது.

இதர காரணங்கள்:

ஊட்டச்சத்து குறைபாடு, கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் வாய் வறட்சி ஆகியவை அடங்கும்.

தொண்டை வலி அல்லது சைனசிடிஸ் மற்றும் வயிற்று வியாதிகள் போன்ற இரைப்பை குடல் புண்கள், அஜீரண ஸ்னாக்ஸ் மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற தன்மை போன்றவை அனைத்தும் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சுகாதார பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

பல் குழிகள், உணவுத் துகள்களின் உறைவிடம், மற்றும் ஈறு கோளாறுகள் போன்ற பல் கோளாறுகளும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த கெட்ட வாய் துர்நாற்றத்தை எப்படியெல்லாம் போக்கலாம் மருத்துவ முறையில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

புதினா இலை

இது நமக்கு இருக்கக்கூடிய அஜீரண கோளாறு நெஞ்செரிச்சல் இதை அனைத்தையும் சரி செய்யும். வயிற்றுப்புண் வாய்ப்புண் பிரச்சனைகளை போக்குவதற்கான தன்மை உண்டு.

பச்சைக் கற்பூரம்

இதனை பயன்படுத்துவதனால் செரிமான கோளாறு நீங்கிவிடும் மற்றும் வயிறு சுத்தமாகவும் இருக்கும்.

ஏலக்காய்

செய்முறை:

1: முதலில் ஒரு 5 புதினா இலையை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.

2: பின்பு உரலில் 5 புதினா இலை 1 பச்சை கற்பூரம் மற்றும் 1 ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அதனை எடுத்து நம் வாயில் ஒரு பக்கம் அடக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதில் வரும் உமிழ் நீரை நாம் தாராளமாக முழுங்கலாம். இதனை ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைத்துக் கொண்டு பின்பு தண்ணீர் குடித்து விடலாம். இதனை ஒரு 3 நாள் தொடர்ந்து பண்ணலாம்.

இதனை பயன்படுத்துவதற்கு முன்பு காலையில் எழுந்தவுடன் பல் துவக்கிப் பிறகு நல்லெண்ணையை எடுத்து நன்றாக வாயில் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொப்பளிக்க வேண்டும்.

இப்படி செய்து வந்தால் வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கிவிடும் மற்றும் தொண்டையில் உள்ள சளி அடர்ஜி போன்ற பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

இதனை வாரத்தில் ஒருமுறை செய்தால் போதும்.செய்து வந்தால் நம் வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கிவிடும் .