திமுகவின் அமைச்சர் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
69

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்சமயம் அவர் திமுகவில் சேர்ந்து கரூர் மாவட்ட சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக மின்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள்.

அத்துடன் செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றின் ரசீதுகள், தங்க ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பலரிடம் பெற்ற சுயவிபரக் குறிப்புகள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில் இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத காரணத்தாலும் செந்தில்பாலாஜி பணத்தை வாங்கியவர்களிடம் திருப்பித் தந்து விட்டதாக குற்றம் சுமத்தியவர்கள் மனு கொடுத்ததாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பிரிவினர் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்கள். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைப்பற்றி இருக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும், அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலும், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை பிரிவினர் தெரிவித்திருக்கிறார்கள்.